இந்று சட்டமன்றத்துக்குக் கிளம்பும் முன்னர் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளிக்கையில், "பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா சென்னை வருகையில் உள்நோக்கம் ஏதும் இல்லை. கட்சியை பலப்படுத்த வழக்கமாக பாஜக தேசிய தலைவர் மாநிலங்களுக்கு செல்கிறார்.
அதிமுக அரசின் மீது அவதூறு பரப்புவதே தினகரனின் ஒரே வேலை ஆக உள்ளது. தமிழகத்தில் உள்ள முட்டை நிறுவனத்தில் நடக்கும் வருமானவரி சோதனைக்கும் அரசுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது. எதுவும் கிடையாது.
இன்றைய சட்டமன்ற கூட்டத்தொடரில் லோக் ஆயுக்தா தொடர்பான விவாதங்கள் எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. லோக் ஆயுக்தா தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கும் இன்று சட்டப்பேரவையில் பதில் கிடைக்கும். தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். ஒரே நேரத்தில் தேர்தல் என்பது 2024-ம் ஆண்டு அமல்படுத்துவதே சரி என ஆலோசனைக் கூறி உள்ளோம்" எனக் கூறியுள்ளார்.