பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் ரத்து: முழு விவரம் உள்ளே

மின்சார ரயில் வழித்தடங்களில் நடத்தப்டும் பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில் சேவையில் இன்று மற்றும் நாளை பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மின்சார சேவை வழித்தடங்களில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இன்று மற்றும் நாளை ரயில் சேவை நேரம் மாற்றமும், பல ரயில்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை கடற்கரை-வண்ணாரப்பேட்டை இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்றும், நாளையும் (சனி, ஞாயிற்றுக்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 9.30 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் மதியம் 2.40 மணி, திருவள்ளூர்-வேளச்சேரி காலை 11.05 மணி மின்சார ரெயில்கள் இன்றும், கடற்கரை-திருவள்ளூர் மதியம் 1.05 மணி, கடற்கரை-பட்டாபிராம் ராணுவ சைடிங் மதியம் 1.50 மணி, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் காலை 9.30 மணி, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் மதியம் 2.40 மணி, திருவள்ளூர்-கடற்கரை காலை 11.05 மணி ரெயில்கள் நாளையும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

வேளச்சேரி-திருவள்ளூர் மதியம் 12.15 மணி ரெயில் கடற்கரை-திருவள்ளூர் இடையேயும், திருவள்ளூர்-வேளச்சேரி மதியம் 1.40 மணி ரெயில் ஆவடி-வேளச்சேரி இடையேயும், வேளச்சேரி-பட்டாபிராம் ராணுவ சைடிங் மதியம் 12.55 மணி ரெயில் கடற்கரை-பட்டாபிராம் ராணுவ சைடிங் இடையேயும் இன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. திருவள்ளூர்-கடற்கரை மதியம் 1.40 மணி ரெயில் ஆவடி-கடற்கரை இடையே நாளை பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

கடம்பத்தூர்-வேளச்சேரி மதியம் 12.05 மணி, ஆவடி-வேளச்சேரி மதியம் 12.10, 2.40 மணி ரெயில்கள் இன்றும், கடம்பத்தூர்-கடற்கரை மதியம் 12.05 மணி, ஆவடி-கடற்கரை மதியம் 12.10, 2.40 மணி ரெயில்கள் நாளையும் மூர்மார்க்கெட் மார்க்கமாக இயக்கப்படும்.

வேளச்சேரி-திருத்தணி காலை 11.20 மணி ரெயில் வேளச்சேரிக்கு பதிலாக மூர்மார்க்கெட்டில் இருந்து இன்று மதியம் 12.15 மணிக்கும், வேளச்சேரி-அரக்கோணம் மதியம் 1.35 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து மதியம் 2.30 மணிக்கும், வேளச்சேரி-சூலூர்ப்பேட்டை மதியம் 1.55 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து 2.45 மணிக்கும் புறப்படும்.

கடற்கரை-திருத்தணி மதியம் 12.10 மணி ரெயில் கடற்கரைக்கு பதிலாக மூர்மார்க்கெட் ரெயில் நிலையத்தில் இருந்து நாளை மதியம் 12.15 மணிக்கும், கடற்கரை-அரக்கோணம் மதியம் 2.25 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து மதியம் 2.30 மணிக்கும், கடற்கரை-சூலூர்ப்பேட்டை மதியம் 2.40 மணி ரெயில் மூர்மார்க்கெட்டில் இருந்து மதியம் 2.45 மணிக்கும் புறப்படும்.

ஆவடி-பட்டாபிராம் ராணுவ சைடிங் மதியம் 2.20 மணிக்கு சிறப்பு மின்சார ரெயில் 2 நாட்களும் இயக்கப்படும்.

கடற்கரை-செங்கல்பட்டு பிரிவில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கடற்கரை-தாம்பரம் காலை 9.12, 9.25, 9.42, 10, 10.20, 10.40, 10.45, 10.50, 11.10, 11.20, 11.40, 11.50, 12.10, 12.20, 12.40, 12.50 மணி ரெயில்கள், தாம்பரம்-கடற்கரை காலை 9.50, 10, 10.20, 10.40, 10.50, 11.10, 11.20, 11.50, 12, 12.30, 12.50, 1.15, 1.30, 2, 2.15 மணி ரெயில்கள் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

கடற்கரை-தாம்பரம் காலை 10.30, 11.30, 1 மணி, கடற்கரை- செங்கல்பட்டு காலை 9.35, 10.15, 11, 12, 12.30, 1.15, 1.45 மணி, கடற்கரை-திருமால்பூர் காலை 9.50, 1.30 மணி ரெயில்கள், திருமால்பூர்- கடற்கரை காலை 8, 10.25 மணி, செங்கல்பட்டு- கடற்கரை காலை 9.40, 10.50, 11.50, 12.15, 1 மணி, தாம்பரம்-கடற்கரை காலை 10.10, 11, 11.30, 12.10 மணி ரெயில்கள் நாளை எக்ஸ்பிரஸ் வழித்தடத்தில் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds