120 அடியையும் தாண்டிய மேட்டூர் அணை நீர்மட்டம்!

மேட்டூர் அணையில் முழு கொள்ளவான 120 அடியையும் தாண்டி நீர் மட்டம் உயர்ந்துவிட்டதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.41 அடியில் இருந்து 120.05 அடியாக உயர்ந்துள்ளது. பாதுகாப்பு கருதி மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து இன்று இரவு 8 மணிக்கு 65,000 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து இன்று இரவு 9 மணிக்கு 75,000 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசின் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “காவிரியில் அதிக நீர் வருவதால் அனுமதி இல்லாத பகுதிக்கு செல்ல வேண்டாம். தண்டோரா, தொலைக்காட்சி, நாளிதழ்கள் மூலம் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது” என அறிவித்துள்ளார்.

READ MORE ABOUT :