கேரளாவில் நிபா வைரஸ் தாக்குதலை தொடர்ந்து ஷிகெல்லா வைரஸ் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் சமீபத்தில் நிபா என்ற வைரஸ் காய்ச்சல் பரவியது. இந்த காய்ச்சலை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இருப்பினும், சுமார் 17 பேர் பலியாயினர். நிபா வைரஸ் கேரளா மட்டுமின்றி அண்டைய மாநிலங்களான தமிழகம், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்டவையும் அச்சுறுத்தியது.
நிபா வைரஸ் தாக்கம் மெல்ல மெல்ல மறைந்த நிலையில், தற்போது, ஷிகெல்லா என்ற புதிய பாக்டீரியா தொற்று பரவி கேரள மக்களை மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாக்டீரியா குறிப்பாக குழந்தைகளிடம் வேகமாக தாக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, இந்த ஷிகெல்லா என்ற வைரஸ் கோழிக்கோடு மாவட்டத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. கோழிக்கோடு மருத்துவமனையில் ஷிகெல்லா வைரஸ் தாக்கி 2 வயது குழந்தை இறந்தது தெரியவந்தது.