திமுக தலைவர் கருணாநிதி மருத்துமவனையில் நலமுடம் இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் காவேரி மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நாடு முழுவதில் இருந்தும் அரசியலை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் நேரில் மற்றும் போனிலும் நலம் விசாரித்து வருகின்றனர்.
அந்த வகையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கருணாநிதியை சந்திக்க இன்று காலை சற்று நேரத்திற்கு முன்பு காவேரி மருத்துவமனை சென்றார். அவருடன் அமைச்சர்களும் சென்றிருந்தனர்.
கருணாநிதியை சந்தித் பிறகு வெளியில் வந்த முதல்வர் எடப்பாடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: திமுக கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி உடல் நலத்துடன் இருக்கிறார். அவரது உடல் நிலை தற்போது சீராக இருக்கிறது. மருத்துவக் குழுவினர் உடன் இருந்து தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.