பாஜக நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது- மம்தா

பாஜக நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது- மம்தா பானர்ஜி

Aug 2, 2018, 23:13 PM IST

மத்தியில் ஆளும் பாஜக அரசு சூப்பர் நெருக்கடி நிலையை ஏற்படுத்தியிருப்பதாக மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

Mamata banerjee

அசாம் மாநிலத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் வரைவு பதிவேட்டில் 40 லட்சம் பேர் இடம்பெறவில்லை. அதில் முன்னாள் குடியரசு தலைவர் குடும்பத்தினர் பெயரும் இல்லை என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த விவகாரத்தில், பா.ஜ.கவுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் வார்த்தை போரை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் அசாமிற்கு குழு ஒன்றை அனுப்பியது.

சில்சார் விமான நிலையத்திற்கு வந்த அந்த குழுவை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் விமானநிலையத்தைவிட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என தெரிகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குழு, மம்தா பானர்ஜியிடம் அங்கு நடந்த சம்பவங்களை
எடுத்துரைத்துள்ளனர்.

இது குறித்து கொல்கத்தாவில் பேசிய மம்தா பானர்ஜி, "திரிணாமுல் காங்கிரஸ் குழுவில்
இடம்பெற்றிருந்த பெண்களை காவல்துறையினர் தாக்கியுள்ளனர். இது சூப்பர் நெருக்கடி
நிலையை பாஜக பிறப்பித்துள்ளதை காட்டுகிறது. அசாமில் அமைதி நிலவுகிறது என்றால்
ஏன் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என கேள்வி எழுப்பியுள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள மம்தா பானர்ஜி 3-வது
அணியை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

You'r reading பாஜக நெருக்கடி நிலையை ஏற்படுத்தியுள்ளது- மம்தா Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை