கர்நாடக மாவட்டம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் கிருஷ்ணராஜசாகர் அணை, மற்றும் கபினி அணை இரண்டும் நிரம்பி வழிந்தன. இந்த இரு அணைகளில் இருந்தும் உபரி நீர் திறந்து விடப்பட்டது. அதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கடந்த மாதம் 10ஆயிரம் கன அடி நீராக வெளிவந்த உபரி நீர் வேகமாக உயர்ந்து 1.20லட்சம் கன அடி நீராக உபரி நீர் வெளியேற்றபட்டது. நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கலில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் தடை விதித்தது மாவட்ட நிர்வாகம்.
ஆடி பெருக்கு விழா முன்னிட்டும் , ஆற்றில் நீர் வரத்து குறைந்துள்ளதாலும், பரிசல் இயக்க அனுமதிக்க வேண்டும் என்றும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை விடுத்தனர்.
கடந்த 25 நாட்களாக தடை அமலில் இருந்துவந்த நிலையில் தற்போது பரிசல் ஓட்டிகள் மாவட்ட நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தியதன் மூலம் இன்று முதல் பரிசல் இயக்க நிர்வாகம் அனுமதித்துள்ளது.