இ- சலான் திட்டத்தின் கீழ் கடந்த இரண்டு மாதங்களில் 5 கோடி ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகர காவல்துறை, கடந்த மே 10-ஆம் தேதி முதல், பணமில்லா அபராத தொகை வசூலிக்கும் இ-சலான் திட்டத்தை அறிமுகப்படுத்தினர். அதன் மூலம் போக்குவரத்து விதிமீறல் ஈடுபடுபவர்கள், போக்குவரத்து காவலர்களிடம் பணமாக செலுத்தாமல் கிரெடிட் கார்ட் டெபிட் கார்ட் எஸ்பிஐ இணையதள வங்கி சேவை பேடிஎம் அரசு இ சேவை மையம் தபால் நிலையம் அல்லது நீதிமன்றத்தில் அபராத தொகையை செலுத்துவதற்கான நடைமுறையை கொண்டு வரப்பட்டது.
போக்குவரத்து காவலர்களுக்கும் வாகன ஓட்டிகள் மீது ஏற்படும் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்ப்பதற்காகவும் போக்குவரத்து காவலர்கள் லஞ்சம் பெறுவதை தடுப்பதற்காகவும் இந்த முறை அமல்படுத்தப்பட்டது.
மேலும், இ-சலான் முறையில் கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை ஐந்து கோடி ரூபாய் அபராதத் தொகையாக வசூலிக்கப்பள்ளதாகவும், 5 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் போக்குவரத்து கூடுதல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
90 சதவீத வாகன ஓட்டிகள் தங்களுடைய அபராதத் தொகையை முறையாக செலுத்தி இருப்பதாக அவர் கூறினார். சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று நடந்த இரண்டு குறும்படங்கள் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், இந்த தகவலை தெரிவித்துள்ளார்.