தமிழகம் முழுவதும் திரைப்பட காட்சிகள் ரத்து

by Isaivaani, Aug 7, 2018, 18:23 PM IST

திமுக கருணாநிதி உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், தற்போது முதல் நாளை வரை தமிழகம் முழுவதும் திரைப்பட காட்சிகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், டாஸ்மாக் கடைகளும் இன்று மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதைதவிர, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ஏடிஎம் மையங்கள் மற்றும் பெட்ரோல் நிலையங்கள் அனைத்திலும் கூட்டம் அலைமோதிய வண்ணம் உள்ளன. மேலும், சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் காணப்படுகிறது. சென்னையில் பிரதான இடங்களில் மின் தடை ஏற்பட்டுள்ளது.

You'r reading தமிழகம் முழுவதும் திரைப்பட காட்சிகள் ரத்து Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை