மேற்குதொடர்ச்சி மலையையொட்டி உள்ள கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கோவை, நீலகிரி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"வட மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. மேலும் கர்நாடக பகுதிகளில் வளிமண்டலத்தின் மேல்அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இவற்றின் காரணமாக மேற்கு திசைக்காற்று வலுஅதிகரித்துள்ளது."
"இதன் காரணமாக மேற்குதொடர்ச்சி மலையையொட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்து வரும் 2 தினங்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்" என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
"தமிழகம் மற்றும் புதுவையில் இதர பகுதிகளில் லேசான ஒரு விதமான முறைகளில் பெய்யக்கூடும் மீனவர்கள் மத்திய வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடற்பகுதியில் அடுத்து வரும் இருதினங்களுக்கு செல்ல வேண்டாம்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது."சென்னை யை பொறுத்தவரை மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமானாது மழை பெய்யும்." என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.