ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்கப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரி, முன்னாள் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் பொன்ராஜ் தலைமையில், தலைமை செயலகத்திற்கு வந்தவர்கள் , முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளித்தனர்.
பின்னர் பேசிய அந்த அமைப்பினர், "ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டு இருப்பதினால் ஆலையை சுற்றி உள்ள மக்கள், கடைகள் வைத்திருப்பவர்கள் என பலர் வேலை வாய்ப்புகள் இல்லாமல் கூலி வேலை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளது" என்றனர்.
“மேலும், ஸ்டெர்லைட்டால் கிராம மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆலையை சுற்றி உள்ள மக்கள் அவசரப்பட்டு போராடி விட்டோம். தொழிலாளர்களின் நலன் கருதி உடனடியாக ஆலையை திறக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.