பொறியியல் படிப்பை தொடர்ந்து எம்பிஏ, கலை மற்றும் அறிவியல் படிப்பின் தரத்தை உயர்த்த ஐஐடி முன்னாள் மாணவர்கள் அமைப்பு முடிவு செய்துள்ளது.
ஐஐடி முன்னாள் மாணவர்களால் கடந்த 2012ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பால்ஸ் என்ற அமைப்பின் நோக்கம், தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள், பேராசிரியர்களின் தரத்தை உயர்த்துவது, தொழில் சாலைக்கு மாணவர்களை அழைத்து சென்று பயிற்சி வழங்குவது. மேலும், பொறியியல் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகப்படுத்துவ தாகும்.
பால்ஸ் அமைப்பின் 8 வது ஆண்டின் துவக்க விழா சென்னை ஐஐடி வளாகத்தில் நடந்தது. ஐஐடி இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா கலந்து கொண்டனர்.
பின்னர் மேடையில் பேசிய சுரப்பா, தமிழகத்தில் உள்ள 509 பொறியியல் கல்லூரிகளில் முன்னணியில் உள்ள கல்லூரகளுடன் போட்டி போட முடியாமல் கடந்த 4 ஆண்டில் பல கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இது போன்ற அமைப்பின் மூலம் தடுக்க முடிக்க என நம்பிக்கை தெரிவித்தார்.
2012ஆம் ஆண்டில் 8 கல்லூரிகளுடன் பணியை துவங்கிய பால்ஸ் அமைப்பு இந்தாண்டு மதுரை, கோவை திண்டுக்கல், திருச்சி, சேலம் என 28 கல்லூரிகள் சேர்ந்துள்ளன. இது மேலும் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.
தங்களது திறன் மேம்பாட்டு பயிற்சியின் மூலம் தமிழக முழுவதும் 15 ஆயிரம் பொறியியல் மாணவர்களும், 5 ஆயிரம் பேராசிரியர்களும் பயன்பெற்றுள்ளனர்.
மேலும், ஐஐடி கல்லூரி பேராசிரியர்கள் மூலம் வரும் ஆண்டில் எம்பிஏ, கலை மற்றும் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என அந்த அமைப்பின் தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.