திமுக தலைவர் மறைந்த கருணாநிதி நினைவிடத்தில் கலைஞர்கள் இசை அஞ்சலி செலுத்தினர்.
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ஆம் தேதி காலமானதை தொடர்ந்து, அவரது உடல் அண்ணாநினைவிடம் அருகே, 8-ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட பத்து நாட்கள் கடந்த நிலையில் அவரது நினைவிடத்தில் தொண்டர்கள், பொதுமக்கள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழ், திராவிட அமைப்புகள் மற்றும் விவசாயிகள், தொழிற்சங்கத்தினர் என ஒவ்வொரு நாளும் ஏராளமானோர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக தமிழ்நாடு அனைத்து நாதஸ்வர தவில் கலைஞர்கள் சங்கத்தினர் கருணாநிதி நினைவிடத்தில் நாதஸ்வரம் ,தவில் வாத்தியங்களை இசைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதேபோல, அனைத்து ஆட்டோ தொழிற்ச்சங்கம் கூட்டமைப்பு சார்பில் 200-க்கும் மேற்பட்டோர் திமுக தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
திமுக முதன்மை செய்லாளர் துரைமுருகன், திமுக முன்னால் அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
திமுக மகளிர் அணியைச் சார்ந்த சிம்லா முத்துசோழன், நடன இயக்குனர் கலா, உள்ளிட்ட ஏராளமானோர் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.