கேரள மக்களுக்கு தமிழகத்தில் தயாராகும் சப்பாத்தி

கேரள மக்களுக்கு தமிழகத்தில் உணவு தயாரிக்கும் பணி

Aug 18, 2018, 22:43 PM IST

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு தமிழகத்தில் உணவு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Kerala flood

கனமழை வெள்ளத்தால், கேரள மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். உணவு, உடையின்றி தவிக்கும் அவர்களுக்கு பல மாநில மக்கள் நேசக்கரம் நீட்டி வருகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக உலகம் முழுவதிலுமிருந்து பொருட்கள் குவியத் துவங்கியுள்ளன.

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு தற்போது அங்கு தேவை அதிகமாக இருப் பதை அடுத்து நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் முதற்கட்டமாக 10 ஆயிரம் சப்பாத்திகள் தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ள இந்த சப்பாத்தி தயாரிக்கும் பணி பொது மக்கள் ஆதரவைப் பொறுத்து கூடுதலாக தயாரிக்கப்பட வாய்ப்புள்ளது. ஏற்கெனவே நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இன்று திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுன.

இந்நிலையில் தற்போது பொதுமக்களிடமிருந்து அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

You'r reading கேரள மக்களுக்கு தமிழகத்தில் தயாராகும் சப்பாத்தி Originally posted on The Subeditor Tamil

More District news News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை