ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் தமிழர்களாக இருந்து விடுதலைப் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவிற்கு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும், இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்திருந்தார்.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்படுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிடிவி தினகரன், “2ஜி வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
எதிர்கட்சி என்பதால் சிறைக்கு செல்ல வேண்டும் என நினைக்கவில்லை. ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் தமிழர்களாக இருந்து விடுதலைப் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.