2ஜி வழக்கில் ஊடகங்கள் உண்மையை வெளியிட வேண்டும்: ஸ்டாலின்

தீர்ப்பு குறித்த செய்தியை ஊடகங்கள் உண்மையாக வெளியிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Dec 21, 2017, 12:07 PM IST

தீர்ப்பு குறித்த செய்தியை ஊடகங்கள் உண்மையாக வெளியிட வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

MK Stalin 2G

தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவிற்கு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டதாகவும், இதில் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கின் விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கப்படும் என்று நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்திருந்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் ஊழல் நடந்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் இருந்து ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்படுள்ளது.

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், "பொய் கணக்கை காட்டி, சித்தரிக்கப்பட்ட வழக்கு என்பதை நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு குறித்த செய்தியை ஊடகங்கள் உண்மையாக வெளியிட வேண்டும்.

குற்றம் சாட்டப்பட்ட நேரத்தில் காட்டப்பட்ட முனைப்பை விட அதிகமாக தீர்ப்பு செய்தியை இப்போது மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்” என்றார்.

You'r reading 2ஜி வழக்கில் ஊடகங்கள் உண்மையை வெளியிட வேண்டும்: ஸ்டாலின் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை