சம்பள உயர்வை பெற்ற திமுக எம்.எல்.ஏக்கள்...

13 மாத நிலுவைத் தொகையுடன் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள்

Aug 28, 2018, 18:46 PM IST

புதிய சம்பளத்தை 13 மாத நிலுவைத் தொகையுடன் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பெற்றுக் கொண்டனர்.

DMK MLAs

எம்.எல்.ஏ.க்களின் மாத சம்பளம் ஒரு லட்சத்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில், போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கோரி போராட்டம் நடத்தினர். இதனை காரணம் காட்டி, திமுக எல்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வு வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையடுத்து, பழைய சம்பளமான 55 ஆயிரம் ரூபாயை மட்டுமே திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு தமிழக அரசு வழங்கிய வந்தது. இந்நிலையில், எதிர்க் கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு புதிய சம்பளத்தை வழங்கும் படி, சட்டப்பேரவை செயலாளரிடம் கடிதம் அளித்தார்.

அதன் அடிப்படையில், திமுக எம்.எல்.ஏ.க் களுக்கு புதிய சம்பளம் வழங்க சட்டப்பேரவை செயலாளர் உத்தரவிட்டார். இதையடுத்து திமுக எம்.எல்.ஏ க்கள் 89 பேருக்கும் 1.7 2017 முதல் கணக்கிட்டு 13 மாத நிலுவைத் தொகை 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அரசு வழங்கியுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி மரணமடைந்த நாள் வரை கணக்கிட்டு அவருடைய வங்கிக் கணக்கிலும் 6 லட்சம் ரூபாயை தமிழக அரசு செலுத்தியுள்ளது. இனி வரும் மாதங்களில் புதிய சம்பளம் வழங்கப்படும். இதற்கிடையே, கருணாநிதிக்கும், அவர் மரணமடைந்த நாள் வரை கணக்கிட்டு, நிலுவை சம்பளம், அவரது வங்கிக் கணக்கில் வழங்கப்பட்டுள்ளது.

You'r reading சம்பள உயர்வை பெற்ற திமுக எம்.எல்.ஏக்கள்... Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை