கௌரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்வதற்கான பெயர் பட்டியலை வரும் 31ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு அரசு கல்லூரி நிர்வாகங்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், மாதம் ரூ. 25000 சம்பளத்திற்கு 3,000 கௌரவ பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
பல்கலைக்கழக மானிய குழு வகுத்துள்ள விதிமுறைகள்படி, தகுதி வாய்ந்தவர்களை பணி நிரந்தரம் செய்ய முயற்சி கள் மேற்கோள்ளப்பட்டு வருவதாகவும், அதன்படி 3000 பேரில் 1400 பேர் வரை பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முதற்கட்டமாக அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களின் பெயர் பட்டியலை வருகிற 31ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கல்லூரி கல்வி இயக்குனர் சாருமதி உத்தரவிட்டுள்ளார்.
பல்கலைக்கழக மானியக்குழு வகுத்துள்ள விதிமுறைப்படி தகுதி வாய்ந்த விரிவுரையாளர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.