அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் வணங்காமுடி உட்பட 6 பேருக்கு லஞ்ச ஒழிப்புத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் வெளிநாடு வாழ் மாணவர்கள் கோட்டாவில் தகுதியில்லாத மாணவர்களை சட்டப் பல்கலைக்கழகத்தில் படிக்க அனுமதி அளித்ததாகவும் அதன் மூலம் மாணவர்களிடம் பலகோடி வரை மிகப்பெரிய அளவில் லஞ்சம் பெற்றதாகவும் கூறி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
முன்னாள் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி, பதிவாளர் அசோக்குமார், பேராசிரியர்கள் சர்வானி, ஜெய சங்கர் உள்ளிட்ட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை கடந்த மார்ச் மாதம் வழக்குப் பதிவு செய்தது.
சட்டப் பல்கலைக்கழகத்தில் வெளிநாடுவாழ் மாணவர்கள் போட்டோவில் 15% வரை மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் இந்த 15 சதவீதத்தில் தான் பெரும்பாலான முறைகேடுகள் நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
வெளிநாடுவாழ் மாணவர்கள் கோட்டாவில் 2016-ம் ஆண்டு சேர்க்கப்பட்ட 93 மாணவர்களில் 16 பேர்கள் மட்டுமே தகுதியானவர்கள் என்பதும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விசாரணையில் தெரியவந்தது. 93 மாணவர்களில் பெரும்பாலோனோர் சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானது எனவும் அதன் மூலம் போலியாக வெளிநாடுவாழ் மாணவர் கோட்டாவில் சட்டப்படிப்பு படித்து விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
வெளிநாடுவாழ் மாணவர் கோட்டாவில் படிக்க இடம் கிடைத்த ஒவ்வொரு மாணவர்களிடம் இருந்து சுமார் 30 முதல் 50 லட்சம் வரை லஞ்சமாக பெற்றுள்ளனர் பெற்றுள்ளதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கல்வித்துறை வட்டாரத்தில் மிகவும் அதிர்ச்சி ஏற்படுத்தியது இந்த வழக்கில், முன்னாள் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி உட்பட ஆறு பேரை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.