கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறை எதிரொலி: 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Dec 23, 2017, 09:46 AM IST

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை தொடர் விடுமுறையால், வெளி ஊர்களுக்கு செல்பவர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

உலகம் முழுவதும் வரும் திங்கட்கிழமை (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் கொண்டாடப்படுகிறது. இதனால் அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு, வார இறுதி விடுமுறை நாட்களை தொடர்ந்து கிறிஸ்துமஸ் வருவதால், சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்களுக்கு விடுமுறை ஆகும்.
இதனால், பொது மக்கள் பலர் விடுமுறை தினங்களை தங்களின் சொந்த ஊரில் கொண்டாட நேற்று மாலை முதல் புறப்பட தொடங்கினர். இதனால், நேற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதை கருத்தில் கொண்டு, பயணிகளின் வசதிக்காக கோயம்பேடு, பெருங்களத்தூர் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து மொத்தம் 600 சிறப்பு பேருந்துகள் விடப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில்,” தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு நேற்று மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. னுனவே, விழுப்புரம், கும்பகோணம், விரைவு போக்குவரத்துக் கழகம் ஆகிய அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் மொத்தம் 600 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இன்றும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் தேவையான எண்ணிக்கையில் சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

You'r reading கிறிஸ்துமஸ் தொடர் விடுமுறை எதிரொலி: 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை