பார்வையாளர்களை கவர்ந்த ராணுவ வீரர்களின் சாகசங்கள்

சென்னை இராணுவ பயிற்சி மையத்தில் நடந்த வீரர்களின் சாகசங்கள் பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.

Military parade in Chennai

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் வீரர்கள் பயிற்சியை நிறைவு செய்தனர்.

இவர்களுக்கான பயிற்சி நிறைவு விழா நாளை நடைபெற உள்ளது. இதனையொட்டி, பயிற்சி முடிந்த வீரர்களின் சாகச நிகழ்ச்சி இன்று நடந்தது.

குதிரை சவாரி, கலரி சண்டை, ஜிம்னாஸ்டிக் சாகசங்கள், மோட்டார் வாகன சாகசங்கள், வான்வழி சாகசங்கள் உள்ளிட்டவைகளை செய்து வீரர்கள் அசத்தினர்.

பயிற்சி நிறைவு செய்த வீரர்களின் குடும்பத்தினர், ராணுவ அதிகாரிகள் சாசகங்களை மிகவும் ஆரவாரத்துடன் பார்த்து ரசித்து கைத்தட்டி மகிழ்ந்தனர்.

நாளை நடைப்பெற இருக்கும் பயிற்சி நிறைவு விழாவில் சிறப்பாக பயிற்சி மேற்கொண்ட இராணுவ அதிகாரிகளுக்கு பதக்கங்களும், பரிசுகளும் வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

READ MORE ABOUT :