தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள் கர்நாடகா முதல் குமரி கடல் பகுதி வரை காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மாநகரின் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது." என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் பள்ளிபட்டில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மற்றும் கோவை மாவட்டம் சின்ன கல்லாரில் தலா 5 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.