ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் வெற்றிடத்தை, டிடிவி தினகரன் அவர்கள் அந்த இடத்தை ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் மூலம் நிருபித்துள்ளார் என்று இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ஜெ அப்துல் ரஹிம் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி ஆகியோரின் வெற்றிடத்தை நடிகர்கள் ரஜினிகாந்த் முதல் கமல்ஹாசன் வரை யார் யாரோ முட்டி போட்டு மோதி பார்த்தும் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள் அந்த இடத்தை ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் மூலம் நிருபித்து உள்ளார்.
துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி மூலம் மத்திய பிஜேபி அரசு கொடுத்த மிகப்பெரிய நெருக்கடியை தன்னுடைய இயல்பான குணத்தால் வெற்றி வாகை சூடியவர் மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்கள்.
ஆட்சியையும் கட்சியையும் துரோகத்தால் கைப்பற்றி திருமதி சசிகலா அவர்கள் குடும்பத்தினரை அழிக்க துரோக தர்ம யுத்தம் நடத்திய துரோகிகளை மக்கள் முன் தோலுரித்து காட்டி வெற்றி பெற்றுள்ளார் மக்கள் செல்வர்.
ஆடிட்டர் குருமூர்த்தி போன்ற பாசிச சக்திகளின் சூழ்ச்சிக்கு எதிராக களமாடிய அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களோடு இணைந்து துரோகத்திற்கு எதிராக பிறை கொடியுடன் இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றியது மிகப்பெரிய மகிழ்ச்சி.
ஆர்.கே. நகர் தேர்தலில் முஸ்லிம்களின் ஓட்டு வங்கி மக்கள் செல்வர் டிடிவி தினகரன் அவர்களுக்கு முழுவதும் விழுந்துள்ளது என்றால் அது மிகையில்லை.
ஆர்.கே. நகர் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக துணைப் பொதுச்செயலாளர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்களுக்கு இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக வாழ்த்துக்கள்.