சிம்லா: இமாச்சலப்பிரதேசம் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, அம்மாநில புதிய முதல்வராக ஜெய்ராம் தாக்கூரை தேர்வு செய்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் இமாச்சலப்பிரதேசம் மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 44 தொகுதிகளை பாஜக கைப்பற்றி, பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றது.
இந்த தேர்தலில், சுஜான்பூர் தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக போட்டியிட்ட பிரேம் குமார் துமால் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரிடம் சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இதையடுத்து, அம்மாநிலத்தின் புதிய முதல்வராக தேர்வு செய்யும் பணி, ஜே.பி.நட்டா மற்றும் அக்கட்சியின் மேலிட கண்காணிப்பில் பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராகவும், புதிய முதல்வராகவும் ஜெய்ராம் தாக்கூரை தேர்வு செய்யப்பட்டார். இதன்மூலம், இமாச்சலப்பிரதேசத்தின் 13வது முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் விரைவில் பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.