சாரிடான் விற்க தகுதியானவையா? உச்ச நீதிமன்றம் புதிய தீர்ப்பு

மருந்துகளுக்கு மட்டும் விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது

Sep 17, 2018, 20:34 PM IST

இந்தியாவில் மட்டும் இதுவரை  328 மருந்துகள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்ட நிலையில், சாரிடான் மாத்திரை உட்பட 3 மருந்துகளுக்கு மட்டும் விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு மருத்துவ தொழில்நுட்ப ஆய்வு,  அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருந்தது. அதில் மட்டும் 349 மருந்துகள் நாம் உட்கொள்ள தகுதி அற்றவை என்று தெரிவித்திருந்தது.

இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம், சாரிடான், தோல் பிரச்சனைகளுக்கான பாண்டோர்ம், லுபிடிக்ளாக்ஸ், உள்ளிட்ட 328 மருந்து, மாத்திரைகளுக்கு தடை விதித்தது. அதே சமயம் டீகோல்ட் டோட்டல், கோரக்ஸ் உள்ளிட்ட மருந்துகள் தகுதியானவை என்று அப்பொழுது உறுதி அளித்துள்ளது.

இந்த நிலையில், கடந்த வாரம் தடைவிதிக்கப்பட்ட 328 மருந்து பொருட்களில் டார்ட் வலி நிவாரணி, சாரிடான் மற்றும் பிரிட்டான் ஆகிய மூன்று மருந்துகளை மட்டும் தொடர்ந்து கடைகளில் விற்பனை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் தற்போது அனுமதி வழங்கி நடைமுறைப் படுத்தியுள்ளது.

You'r reading சாரிடான் விற்க தகுதியானவையா? உச்ச நீதிமன்றம் புதிய தீர்ப்பு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை