கர்ப்பிணிப் பெண்கள் குளிர்ந்த நீரில் குளிக்கலாமா?

கருவுற்ற பெண்கள் பொதுவாக குளிர்ந்த நீரில் குளிக்கக்கூடாது

Sep 17, 2018, 21:27 PM IST

கர்ப்ப காலத்தில் பெண்ணின் கருவில் இருக்கும் குழந்தைக்கும், தாயிற்கும் ஏற்படும் மாற்றம் ஒன்றாகத்தான் இருக்கும். உடலாலும் சரி மனதாலும் சரி கருவுற்ற பெண்ணிற்கு சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் அது குழந்தையின் வளர்ச்சியிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். கருவுற்ற பெண்கள் பொதுவாக குளிர்ந்த நீரில் குளிக்கக்கூடாது.

ஈரத் தலையுடன் இருப்பதையும் தவிர்த்து விடல் வேண்டும். குளிர்ந்த காற்று, வாடைக்காற்று மற்றும் பனிக்காற்று வீசும் போது ஜன்னல் ஓரம் அதிக நேரம் நிற்ப்பதை தவிர்த்தல் வேண்டும். மழையிலோ அல்லது மழைச்சாரலிலோ நனைதல் கூடாது. அவ்வாறு நனைய நேரிட்டால் வீட்டிற்கு வந்தவுடன் வெந்நீர் வைத்து இளம்சூடான நீரில் உடனே குளித்து விட வேண்டும்.

எப்போதும் நன்கு காய்ச்சி ஆறிய நீரை குடித்தல் வேண்டும். அதிலும் முடிந்தவரை அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக சூடான நீரை பருகக்கூடாது. குளிர்சாதன பெட்டியில் வைத்த குளிர்பானங்கள், குளிர்ந்த நீர் மற்றும் குளிர்ந்த உணவு பொருட்களை உண்ணாமல் தவிர்த்தால் ஜலதோஷம் வராது.

ஜலதோஷம் வந்தால் அது கருவில் இருக்கும் குழந்தையை பாதிக்கும். அதிக காரம் மற்றும் புளிப்பு போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும். எளிதில் ஜீரணமாகும் உணவுகளை உண்பது நல்லது.

இதுபோன்ற டிப்ஸ்களை மனத்தில் நிறுத்திக் கொண்டு உங்கள் கர்ப்பக்காலத்தை சுலபமாக்கி கொள்ளுங்கள்.

More Aval News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை