ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு 25 பேர் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
கடந்த வாரம் அப்போலோ நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதனிடம் நடந்த விசாரணையின் போது, ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில் பதிவான சி.சி.டிவி காட்சிகளை 7 நாட்களில் சமர்பிக்க ஆணையம் உத்தரவிட்டது.
இந்த காலகெடு முடிந்துள்ள நிலையில் அவரை வரும் 25ஆம் தேதி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பபட்டுள்ளது.
மேலும், சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்ய ஆஜராகுமாறு 25 பேருக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது.
24 ஆம் தேதி:
மருத்துவர்கள் ராமச்சந்திரன், அர்ச்சனா, நளினி, சினேகா ஸ்ரீ, ரமாதேவி, ஷில்பா, செவிலியர்கள் பிரேமா ஆண்டனி, விஜயலட்சுமி, ஹெலனா, அலோக் குமார் பேங்க் ஆப் இந்தியா மேலாளர், எக்கோ டெக்னீசியன் நளினி.
25 ஆம் தேதி :
மருத்துவர்கள் பத்மாவதி, வெங்கட்ராமன், வழக்கறிஞர் மனோஜ்பாண்டியன், அப்பல்லோ நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன்.
26 ஆம் தேதி :
மருத்துவர்கள் சுப்பிரமணியன், சஜன் கே ஹெக்டே, கே.ஆர்.பழனிசாமி, வி.என்.அருள்செல்வன், புவனேஷ்வரி சங்கர், பாபு மனோகர்
27 ஆம் தேதி
மருத்துவர்கள் ரவிக்குமார், பாஸ்கரன், செந்தில்குமார், சாய் சதீஸ். ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பட்டுள்ளது.