எம்ஜிஆரின் 18 படங்களுக்கான உரிமம் சட்ட விரோதமாக சில தொலைக்காட்சிக்கு வழங்கப்படுவதாக அவரின் வளர்ப்பு மகள் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
“எம்ஜிஆரின் வளர்ப்பு மகளும் சினிமா தயாரிப்பு நிறுவனமான சரவணா பிலிம்சின் உரிமையாளர் சாந்தி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை தெரிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சாந்தி, "தயாரிப்பாளர் ஜி.என். வேலுமணி மற்றும் அவரது மகன் ஜி.வி. சரவணன் ஆகியோர் சரவணா பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் எம்ஜிஆர், சிவாஜி நடித்த படகோட்டி, பாலும்பழம், பாகப்பிரிவினை, குடியிருந்த கோயில் உள்ளிட்ட 18 படங்களை தயாரித்துள்ளனர்"
"அந்த படங்களுடைய நெகட்டிவ் மற்றும் சாட்டிலைட் உரிமத்தினை தங்களுக்கு தெரியாமல் துளசிராமன், கன்ஸ்யாம் ஹேம் தேவ், ஜெபக் ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து அவற்றை தனியார் தொலைக்காட்சிகளுக்கு விற்பனை செய்கின்றனர்" எனக் குற்றம்சாட்டினார்.
"இதனால் தங்கள் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரூ.2 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகையால் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன்." என எம்ஜிஆரின் வளர்ப்பு மகள் சாந்தி தெரிவித்துள்ளார்.