எட்டுவழி சாலைதிட்டம் தொடரும்...மத்திய அரசு உறுதி

எட்டுவழி சாலைதிட்டம் தொடரும்...மத்திய அரசு உறுதி

by Rajkumar, Sep 20, 2018, 21:28 PM IST

சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்தால் மட்டுமே சென்னை சேலம் எட்டுவழி சாலைதிட்டம் தொடரும் என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.



அதேநேரத்தில், இத்திட்டம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. சென்னை சேலம் இடையே விவசாய நிலத்தில் 8 வழிச்சாலை அமைக்க மத்திய மாநில அரசுகள் முயற்சித்து வருகிறது. இதற்காக நிலங்களை அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இந்த திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருவண்ணாமலை, சேலம், சென்னை, காஞ்சிபுரம், தர்மபுரி உள்ளிட்ட  5 மாவட்ட மக்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் நிலங்களை தர மறுக்கும் பொது மக்களை கைது செய்து அடித்து துன்புறுத்துவதாகவும் புகார் தெரிவித்திருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி சிவஞானம், பவானி ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபால் திட்டத்திற்கான அட்டவணையை தாக்கல் செய்தார்.

மேலும், சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காவிட்டால் எட்டு வழிச்சாலை பணிகளை தொடர மாட்டோம் என்று உறுதி அளித்தார். இதனையடுத்து பொதுமக்களிடம் கருத்து கேட்கும்போது  நிலஅளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுப்பியது.

இத்திட்டத்திற்காக, நிலங்களை கொடுக்க விரும்பாத பொதுமக்களை துன்புறுத்தக் கூடாது என கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தனர். மேலும் கண்காணிப்பு அதிகாரியை நியமித்து வழக்கு விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

You'r reading எட்டுவழி சாலைதிட்டம் தொடரும்...மத்திய அரசு உறுதி Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை