பொய் சொல்லி ஏமாற்றி வரும் தினகரன் ஒரு மாயமான் - ஓ.பன்னீர்செல்வம்

பொய் சொல்லி ஏமாற்றி வருபவர் தினகரன் ஒரு மாயமான் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

OPS TTV

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி என பெரும் தலைகள் இருந்தும் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, அதிமுவின் அவசர ஆலோனைக்கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.எஸ் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின் எடப்பாடியும், பன்னீர்செல்வமும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘’அதிமுவில் டிடிவியை விட நான் 18 ஆண்டு சீனியர். நான் அவரால் அதிமுகவிற்கு வரவில்லை. அவருக்கு முன்பே பல வருடங்களூக்கு முன்னரே நான் அதிமுகவிற்கு வந்துவிட்டேன்.

பொய் சொல்லி ஏமாற்றி வருபவர் தினகரன். தான் ஒரு 420 என்று அவரே என்னிடம் கூறியிருக்கிறார். கட்சிக்கு துரோகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணப்பட்டுவாடா குறித்து விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தோம். பணப் பட்டுவாடாவை தடுக்கும் சக்தி தேர்தல் ஆணையத்திடம் தான் உள்ளது.

20 ரூபாய் நோட்டை வைத்துக்கொண்டு டிடிவி தினகரன் வீட்டு வாசலில் மக்கள் காத்திருக்கின்றனர். உறுதியளித்ததுபோல் 10 ஆயிரம் ரூபாய் தரக்கோரி டிடிவி வீட்டு முன்பு மக்கள் காத்திருக்கின்றனர். தினகரன் ஒரு மாயமான்’’ என்று தெரிவித்தார்.