அரக்கோணம் கடற்படைத் தளத்தில் விழுந்து நொறுங்கிய பயிற்சி ஹெலிகாப்டர் !

by Manjula, Oct 1, 2018, 14:03 PM IST

அரக்கோணம் ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படைத் தளத்தில் பயிற்சி
ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 4 பேர் காயம் அடைந்தனர்.

ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படைத் தளத்தில் ஹெலிகாப்டர் பைலட் பயிற்சிப் பள்ளி ஒன்றும் உள்ளது. இங்கு ஆண்டுக்கு 2 முறை இந்திய கடற்படை வீரர்கள் மற்றும் கடலோரக் காவல் படை வீரர்கள் ஹெலிகாப்டர் பயிற்சி பெறுகின்றனர். அந்த வகையில் இன்று காலை ஒரு ஹெலிகாப்டரில் பயிற்சியாளர் உட்பட 4 பேர் பயிற்சிக்குப் புறப்பட்டனர்.

ஹெலிகாப்டர் புறப்பட்ட சில விநாடிகளிலேயே பழுது ஏற்பட்டு தளத்திலேயே விழுந்தது. இந்த விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் ஹெலிகாப்டர் பலத்த சேதம் அடைந்தது.

You'r reading அரக்கோணம் கடற்படைத் தளத்தில் விழுந்து நொறுங்கிய பயிற்சி ஹெலிகாப்டர் ! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை