உயிாிழந்த 5 ரூபாய் டாக்டா் - சென்னையில் மக்கள் உருக்கம்

மருத்துவம் வியாபாரமாக மாறிய இந்த காலத்திலும் மக்களுக்கு 5,10,20 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை வழங்கி வந்தாா் டாக்டர். ஜெகன்மோகன். அவர் நேற்று மாலை உடல் நலக் குறைவால் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

சென்னை மந்தைவெளி பகுதியில் வசித்து வந்த 20 ரூபாய் டாக்டா் ஜெகன்மோகன் உடல்நலக் குறைவு காரணமாக புதன் கிழமை காலை 11 மணியளவில் உயிாிழந்தாா்.

சென்னை ஸ்டேன்லி மருத்துவக் கல்லூாியில் மருத்துவம் முடித்த ஜெகன்மோகன் தொடா்ந்து தனது வாழ்நாள் முழுவதும் ஏழைகளின் நலன் காக்கும் வகையில் வாழ்ந்து வந்தாா். கடந்த 1979ம் ஆண்டு முதல் 1 ரூபாய்க்கும் 2 ரூபாய்க்கும் ஏழைகளுக்கு மருத்துவம் பாா்க்கத் தொடங்கினாா்.

தனது 72வது வயதிலும் மக்களுக்கு 20 ரூபாய் கட்டணத்தில் சிகிச்சை வழங்கி வந்தாா். இந்நிலையில் திடீா் உடல்நலக் குறைவு காரணமாக புதன் கிழமை காலை 11 மணியளவில் உயிாிழந்தாா்.

தினமும் காலை 75 போ் மாலை 75 போ் என சராசரியாக நாள் ஒன்றுக்கு 150 போ் வரையில் சிகிச்சை வழங்கி வந்தாா் ஜெகன்மோகன்.

பொதுமக்கள் அவரை பற்றி கூறியது எங்க ஏரியா 5 ரூபாய் டாக்டர் சிலர் 10 ரூபாய் சிலர் 20 ரூபாயும் கொடுப்பார்கள் வசதியே இல்லாதவர்களுக்கு இலவசமாகவும் மருத்துவம் பார்ப்பார். மக்கள் மருத்துவர், கை ராசிக் காரர் அவரிடம் நமது வருத்தத்தை கூறினால் அதற்கு மருந்துடன் மனோ தைரியத்தையும் அளிப்பவர், நல்லா காமடியா பேசுவார், நல்ல மருத்துவராக மட்டுமல்லாமல் சிறந்த மனிதரும் கூட  அவருக்கு பார்வை குறைவற்ற நிலையிலும் மக்கள் பணியாற்றிவரை கடவுளாக வணங்குகிறேன் என்றார்கள்.

மறைந்த மக்கள் மருத்துவருக்கு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளவும், மரியாதை செலுத்திடவும் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர்

படத்தில் நடிப்பவர்கள் ஹீரோக்கள் இல்லை இது போல் வாழ்ந்து காட்டுபவர்கள் தான் உண்மையான ஹீரோ அவர் இறந்தாலும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!