ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை

Advertisement

ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பட்டாசு விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. ஆனால், இணையதள வர்த்தக நிறுவனங்கள் இனிப்பு வகைகள் முதல் பட்டாசு விற்பனையும் செய்ய தொடங்கிவிட்டன. மேலும், பட்டாசு வாங்குவதற்காகவே பல ஆன்லைன் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர் மழை பொழிந்து வருகின்றனர்.

இதனால், பொது மக்கள் நேரடியாக கடைக்கு சென்று பட்டாசு வாங்குவதை தவிர்த்து ஆன்லைனிலையே பட்டாசையும் வாங்கி வருகின்றனர். இதன் எதிரொலியால், சிவகாசியில் இருந்து பட்டாசுகளை வாங்கி வந்து கடைகள் போட்டு விற்பனை செய்யும் உள்ளூர் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

இதற்கிடையே, இந்திய பட்டாசு விற்பனை பாதிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட சீன பட்டாசுகளும் புழங்குவதாக தெரியவந்துள்ளது.
இதையடுத்து, பட்டாசு வியாபாரம் செய்ய கடைப்பிடிக்க வேண்டிய எந்த ஒரு விதியையும் கடைப்பிடிக்காமல் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஷேக் தாவூத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்வதற்கு தடை விதித்து, வழக்கு மறுவிசாரணையை வரும் நவம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>