கடலூரில் 5 சவரன் நகைக்காக பெண் படுகொலை- பட்டப்பகல் பயங்கரம்

கடலூரில், பட்டப்பகலில் 5 சவரன் நகைக்காக பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் அருகே உள்ள குண்டு உப்பலவாடி கிராமத்தை சேர்ந்த கோபால், கட்டுமான பணிக்கு சென்றுள்ளார். அவரது மனைவி சங்கீதா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதை அறிந்த மர்ம நபர்கள், வீட்டிற்குள் புகுந்து, சங்கீதாவின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை அறுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டனர்.

இந்த சம்பவம் நடந்து இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு வீடு வாடகை பார்க்கவந்த ஒருவர் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது சங்கீதா உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். இவரின் கூச்சலைக் கேட்டு அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர், சங்கீதாவை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே சங்கீதா இறந்துவிட்ட நிலையில். கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். மோப்ப நாய் உதவியுடன் தேவனாம்பட்டினம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பட்டபகலில் நடந்த இந்த சம்பவம் கடலூர் மக்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.

 

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!