புதிய வரவு: ஹானர் 8X ன் சிறப்பம்சங்கள் இதுதான்!

Advertisement

நாள்தோறும் ஏதாவது ஒரு கைபேசியின் அறிமுகம் வந்துக் கொண்டேதான் இருக்கு. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பும் கூடிக்கொண்டே செல்கிறது. நம்ம ஃபோன் மற்றவர்களுடன் ஒப்பிடும் போது அதிக சிறப்பம்சங்கள் கொண்டதாக இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர் அதற்கேற்றாற் போல் மொபைல் ஃபோன் நிறுவனங்களும் போட்டி போட்டு தங்கள் மொபைல் ஃபோனை தயாரிக்கின்றனர்.

இந்நிலையில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஹுவாய் நிறுவனத்தின் கிளை பிராண்டான ஹானர் தனது ஸ்மார்ட் போனான ஹானர் 8X செல்போனை வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஹானர் 7X-யின் மேம்படுத்தப்பட்ட மாடலாகும்.

இவ்வகை ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 5, சியோமி Mi ஏ2, மோட்டோரோலா ஒன் பவர், நோக்கியா 6.1 பிளஸ் ஆகியவற்றிற்கு போட்டியாக எதிர்பார்க்கப்படுகிறது. அக்டோபர் 24 ஆம் தேதி அன்று ஹானர் 8X பிரத்யேக விற்பனை அமேசான் தளத்தில் துவங்குகிறது.

ஹானர் 8X சிறப்பம்சங்கள் பார்க்கலாம்:

இவை 6.5 இன்ச் 2340x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19:5:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே கொண்டது.

அதோடு ஆக்டா-கோர் கிரின் 710 12nm பிராசஸர், மாலி-G51 MP4 GPU உள்ளது.

4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி; 6 ஜிபி ராம், 64 ஜிபி / 128 ஜிபி மெமரி உள்ளது.

டூயல் சிம் ஸ்லாட், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த EMUI 8.2 உள்ளது.

இதில் 20 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8 உள்ளது.

அதோடு 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 16 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0 உள்ளது.

கைரேகை சென்சார், 3750 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது.

ஹானர் 8X ன் விலை இவ்வளவுதான்:

4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்ஃபோன் மாடலின் விலை ரூ.14,999,

6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்ஃபோன் மாடலின் விலை ரூ.16,999,

6 ஜிபி ராம், 128 ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்ஃபோன் மாடலின் விலை ரூ.18,999 ஆகும்.

Advertisement
மேலும் செய்திகள்
fake-sms-that-pretends-to-help-to-register-for-covid-19-vaccination-and-download-malwere-in-mobile-device
கோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து
how-to-find-covid-19-vaccine-centre-in-your-area-through-whatsapp
வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி மையத்தை அறிவது எப்படி?
vivo-v21-5g-smartphone-with-44-mp-selfie-camera-and-triple-rear-camera-with-ois-support-pre-order-launched
44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம்
samsung-galaxy-m42-5g-smartphone-with-quad-camera-and-20-mp-selfie-camera-will-be-on-sale-on-may-1
குவாட் காமிரா 5 ஜி தொழில்நுட்பம்: கேலக்ஸி எம்42 5ஜி அறிமுகம்
oppo-a53s-5g-smartphone-with-13-mp-primary-camera-and-with-offer-in-price-will-be-sale-on-may-2
13 எம்பி முதன்மை காமிராவுடன் ஆப்போ ஏ53எஸ் 5ஜி பட்ஜெட் போன்
vivo-s-brand-iqoo-7-series-smartphone-with-48-mp-and-16-mp-selfie-camera-pre-order-starts-on-may-1
விவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு
xiaomi-mi-11-x-smartphone-with-triple-rear-camera-and-20-mp-selfie-camara-with-6-gb-and-8-gb-ram-will-be-on-sale-from-april-27
20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
rebranded-redmi-k40-pro-smartphone-mi-11-x-pro-with-triple-rear-cameras-and-108-mp-primary-camera-on-sale
108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது
realme-8-5g-with-dynamic-ram-expansion-technology-will-be-go-on-sale-from-april-28-with-triple-rear-camera
டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
oppo-a74-5g-smartphone-with-5g-technology-and-triple-rear-camera-is-launched-with-offer
டிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம்

READ MORE ABOUT :

/body>