தொடர்ந்து ஏழுநாட்கள் அம்மனுக்கு பிடித்த நெய்வேத்தியத்தை படைத்தோம். இன்று நவராத்திரியின் எட்டாம் நாள் தேங்காய் பால் சாதம் செய்து அவளின் அருள் பெறுவோம். சரி தேங்காய் பால் சாதம் எவ்வாறு செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள் :
அரிசி - 2 கப்,
தேங்காய் - அரை மூடி
வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி-பூண்டு விழுது - கால் டீஸ்பூன்,
பட்டை - 3,
லவங்கம் - 5,
ஏலக்காய் - 3,
பிரியாணி இலை - 2,
கறிமசால் பொடி - கால் டீஸ்பூன்,
முந்திரி - 50 கிராம்,
நெய் - 100 கிராம்,
புதினா, கொத்தமல்லி, உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
தேங்காயை அரைத்து 4 கப் பால் எடுத்து கொள்ளவும்.
அரிசியை நன்றாக கழுவி ஊறவைத்து கொள்ளவும்.
ப.மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.
கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து நெய் ஊற்றிச் சூடேறியவுடன் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
பின்பு பச்சை மிளகாய், இஞ்சி-பூண்டு விழுது, வெங்காயம், புதினா சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் தேங்காய்ப் பால், கறி மசால் பொடி, உப்பு சேர்த்துக் கொதி வரும் வரை காத்திருக்கவும்.
கொதி வந்ததும் அரிசியைச் சேர்த்து குக்கரை மூடி 2 விசில் விட்டு 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து இறக்கவும்.
பின்னர் மீதம் உள்ள நெய்யில் முந்திரியை வறுத்து, சாதத்துடன் சேர்த்துக் கிளறவும்.
கமகம வாசனைக்குக் கொத்தமல்லி இலையை சேர்க்கவும்.
சுவையான நவராத்திரி ஸ்பெஷல் தேங்காய் பால் சாதம் தயார்.