பாத வெடிப்பை சரி செய்ய என்ன பண்ணலாம்?

பெண்களின் அழகில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது பெண்ணின் கால்கள். சிலரது கால்களில் வெடிப்பு ஏற்பட்டு மிகுந்த வலியை அனுபவிப்பார்கள். இதுப்போன்று பாத வெடிப்பு வருவதற்கு காரணம் கால்களை அசுத்தமாக வைத்தல் மற்றும் ஊட்டசத்து குறைவின்மையாகும். சரி பாத வெடிப்பை எப்படி சரி செய்வதென்று பார்ப்போம்.

பாத சருமத்தை மென்மையாக்க, பாதங்களை வெது வெதுப்பான தண்ணீரில், 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். அரம் அல்லது சொரிக்கல்லை பயன்படுத்தி பாதத்தில் உள்ள செத்த அணுக்களை, மெதுவாக தேய்த்து எடுக்கவும். பாதங்களுக்கான நல்ல மாய்ஸ்சுரைசிங் க்ரீமை தடவி, 20 நிமிடங்கள் வரை அவை பாதங்களில் நன்றாக ஊறும் படி செய்யவும்.

பாதங்களின் ஈரப்பதத்தை நீட்டிக்க, இரவு மற்றும் பகல் முழுவதும் பாதங்களுக்கு காலுறைகள் அணிந்து கொள்வது நல்லது. ஒரு வாரம் தொடர்ந்து, தினமும் ஒரு முறை செய்தால் நல்ல மாற்றத்தை காணலாம். பெரிய வாளியில் சுடு தண்ணீரை நிரப்பி, அதில் பாதங்களை முக்கிக் கொள்ளுங்கள். அதில், உப்பு, எலுமிச்சை சாறு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் இட்டு, 20 நிமிடங்கள் வரை பாதங்களை ஊற வைக்கலாம். பின், உரைக்கல் அல்லது பாத ஸ்க்ரப்பரை கொண்டு, பாதங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை தேய்க்கவும்.

ஒரு டீஸ்பூன் நீர்க்காத கிளிசரின், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து, கால் பித்த வெடிப்பின் மீது தடவுங்கள். இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு, காலை எழுந்தவுடன் வெது வெதுப்பான நீரில் காலை கழுவி விடுங்கள்.

பாதங்கள் ஈரப்பதத்துடன் இருக்க, தேன் பெரிதும் பயன் தரும். தேனில் சிறந்த ஆன்டிபாக்டீரியல் குணங்கள் அடங்கியுள்ளன. 2 டீஸ்பூன் அரிசி மாவுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து, அடர்த்தியான பேஸ்ட் தயார் செய்யுங்கள்.

பாதங்கள் பித்த வெடிப்புடன், வறண்டு காணப்பட்டால், ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது இனிப்பு பாதாம் எண்ணெயை சேர்த்து, வெது வெதுப்பான நீரில் பாதங்களை, 10 நிமிடம் வரை ஊற வைத்து கழுவிய பின், அந்த பேஸ்ட்டை பாதத்தில் தேய்க்கவும்.

அப்படி செய்யும் போது, பாதங்களில் உள்ள இறந்த அணுக்கள் நீங்கிவிடும். பித்த வெடிப்பு ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போது, வெறும் தேன் அல்லது ஆலிவ் எண்ணெயை தடவலாம். இதை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு தினமும் ஒரு முறை செய்து வந்தால், பித்த வெடிப்புகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

மேற்கூறியவற்றை தினமும், நேரம் கிடைக்கும் போது செய்து வந்தால், நிச்சயம் பாதங்களில் உள்ள பித்த வெடிப்புகள் நீங்கி, பாதங்கள் அழகாக மாறும்.

Advertisement
More Aval News
Super-Tips-for-college-girls
காலேஜ் பெண்களுக்கான சூப்பர் டிரஸ்கள்!!!.
How-to-safely-maintain-silk-sari
பட்டு புடவையை பாதுகாப்பாக பராமரிப்பது எப்படி?
Diwali-Special---Rava-Laddu
தீபாவளி ஸ்பெஷல் : ஈஸியான ரவா லட்டு.!
Removing-sun-tan-from-legs-hands
முழங்கால், கையில் உள்ள கருமைப் போக்க அழகு குறிப்புகள்
beauty-tips-for-fair-skin
கண்ணாடி போன்ற பளிங்கு முகத்திற்கு!!!
Foot-Crack-Home-Remedies
பாத வெடிப்பை சரி செய்ய என்ன பண்ணலாம்?
You-can-embroidery-your-saree
உங்கள் உடையை அலங்கரிக்க நீங்களே போடலாம் எம்பிராய்டரி
Simple-beauty-Tips
செலவே இல்லாத எளிமையான அழகு குறிப்புகள்
ideas-About-bangles-for-teenagers
டீன் ஏஜ் பெண்களுக்கான வளையல் ஐடியாக்கள்
Beauty-Tips-For-College-Girls
காலேஜ் பெண்களுக்கான அழகு குறிப்புகள்.
Tag Clouds

READ MORE ABOUT :