ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக கூறி 27 தமிழர்கள் உள்பட 29 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் அதிகாலை போலீசார் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர்.அதிகாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் சென்ற வாகனத்தை பின் தொடர்ந்த போலீசார், அதனை மடக்கி பிடித்து சோதனை செய்ய முற்பட்டனர்.
அப்போது, போலீசாரரை இடித்து விட்டு அந்த நபர்கள் தப்பி ஓட முயன்றனர் . அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் வனப்பகுதிகள் 20க்கும் மேற்பட்டோர் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அங்கு விரைந்த போலீசார், அனைவரையும் கைது செய்தனர்.
80 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு மினி வேன் மற்றும் இரு கார்கள் 24 செல்போன் 14 கோடாரிகள் 14 ஆயிரத்து 500 ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்தனர். கைதானவர்கள் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.