பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் வழங்க வேண்டும்: தமிழக அரசு வழக்கு

Tamil Nadu government filed case on cackers burst additional time

by Isaivaani, Oct 29, 2018, 19:47 PM IST

தீபாவளி பண்டிகை அன்று, பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

தீபாவளி பண்டியை அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.

இந்நிலையில், பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்றும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், பட்டாசு வெடிக்க 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கியுள்ளதை மாற்றி, காலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இரவில் தொடர்ச்சியாக 2 மணி நேரம் பட்டாசுகளை வெடித்தால் சுற்றுச்சூழல் அதிக அளவில் மாசுபடும் என்றும் தமிழக அரசு சுட்டிக்காட்டி உள்ளது.

You'r reading பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் வழங்க வேண்டும்: தமிழக அரசு வழக்கு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை