வந்தாச்சு...ஜியோவின் 5ஜி அப்டேட்..விவரங்கள் உள்ளே!

Jios 5g came details inside

by Vijayarevathy N, Oct 29, 2018, 20:14 PM IST

இந்திய தொலைத் தொடர்ப்பில் 2ஜி, 3ஜி மற்றும் 4ஜி யை பயன்படுத்திவிட்டோம். தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 5ஜி சேவை குறித்த தகவல்களை முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

நம் இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் நடைமுறைப்படுத்தப்பட்டால் தொலைத் தொடர்ப்பு நிறுவனம் மட்டுமின்றி அனைத்து துறையிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் 2019 - 2020 ஆம் ஆண்டுகளுக்குள் 5ஜி பயன்படுத்தும் சூழல் தயார் நிலையில் இருக்கும் என்றும் ஆனால் 5ஜி தொழில் நுட்பத்தைக் கொண்ட கைபேசி சாதனங்கள் தற்போது வெளியாகாத நிலையில் இவை இந்த ஆண்டு பயன்பாடிற்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

5ஜி தொழில் நுட்பம் நிறைந்த விலை குறைந்த கைபேசி சாதனங்களின் பயன்பாடு இந்தியாவில் வரும் 2021 ல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில ஆண்டுகள் கழித்து பயன்பாட்டிற்கு வரும் இச்சேவைக்கு இப்பொழுதே விலை நிர்ணயம் செய்ய இயலாது என ஜியோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோவில் 5ஜி தொழில்நுட்பத்தை பரிசோதனை செய்ய 28 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல் ஸ்வீடன் நாட்டில் டெலிகாம் உபகரணங்களை உற்பத்தி செய்யும் எரிக்சன் நிறுவனத்துடன் இணைந்து 5ஜி சேவைக்கான வேலைகளில் ஈடுப்பட்டு வருகிறது.

எரிக்சன் நிறுவனத்தின் இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஒசியானா மற்றும் நுன்சினோ மிர்டிலோ பகுதிகளுக்கான தலைவர் 4ஜி தொழில் நுட்பத்துடன் ஒப்பிடும்போது 5ஜி தொழில்நுட்பத்திற்கான கட்டணம் மிக குறைவாகவே இருக்கும் என தெரிவித்துள்ளார்.

You'r reading வந்தாச்சு...ஜியோவின் 5ஜி அப்டேட்..விவரங்கள் உள்ளே! Originally posted on The Subeditor Tamil

More Technology News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை