பண்டிகை நேரம்: மக்களின் கொண்டாட்டமும் தனியார் பேருந்தின் கொள்ளையும்!

private omni buses hike20% ticket price before diwali

by Manjula, Oct 30, 2018, 20:48 PM IST

பெட்ரோல் டீசல் விலை அதிகரித்துள்ளதால் வார இறுதி நாட்களில் ஆம்னி பேருந்து கட்டணம் முன்பை விட 20% உயர்த்தப்பட்டுள்ளது.

நவம்பர் 1ஆம் தேதிக்கு பிறகு தீபாவளி விடுமுறைக்கு  டிக்கெட் புக் செய்யலாம் என்று நினைத்தவர்களுக்கு இது ஒரு அதிர்ச்சியான செய்திதான், தொடர்ந்து முன்று, நான்கு நாட்கள் விடுமுறை என்றாலே பேருந்து கட்டணம் அதிகரித்துவிடும் சொந்த ஊரை சொந்தங்களை விட்டு விட்டு சென்னை போன்ற வெளியூரில் பணிபுரியும் நபர்களுக்கு தொடர் விடுமுறை என்றால் இந்த பஸ் டிக்கெட் கட்டணம் ஒரு பெரிய பிரச்சனை, ரயிலில் முன்பதிவு செய்ய ஒரு மாததிற்கு முன்பே ஊருக்கு கிளம்பும் தேதி தெரிய வேண்டும் ஆனால் பல நிறுவனங்கள் விடுமுறையே இரண்டு நாள்களுக்கு முன்புதான் அறிவிப்பார்கள் பஸ்யில் தான் போகவேண்டிய சூழ்நிலையிருக்கும் இதனை புரிந்து கொண்டு தொடர் விடுமுறை நாட்களில் டிக்கெட் கண்டனத்தை இஷ்டத்திற்க்கு ஏற்றிவிடுவார்கள்.

அரசு பேருந்தில் போகலாம் என்று நினைத்தால் பெரும்பாளான மக்கள் முன்பே பதிவு செய்து விடுவதால் டிக்கெட் கிடைப்பது கடினமாகிவிடும். அரசாங்கம் கட்டண வரம்பு அறிவிக்கும் ஆனால் அதனை செயல்படுத்த மாட்டார்கள், பயனிகளும் ஊருக்கு செல்ல வேண்டிய ஆசையில் அதிக கட்டணம் கொடுத்து சென்றுவிடுகிறார்கள்.

தீபாவளி பண்டிகைக்காக பெரும்பாலானோர் தங்களின் சொந்த ஊருக்கு செல்வதால் ரயில், பேருந்து போக்குவரத்து நம்பியுள்ளனர், ரயில் முன்பதிவு தொடங்கிய 5 நிமிடங்களில் முடிந்துவிடுவதால் பலரின் தெரிவாக ஆம்னி பேருந்துகள் உள்ளன.

சதாரணமாகவே கட்டண உயர்வு இருக்கும் நிலையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வின் காரணமாக ஆம்னி பேருந்து கட்டணம் 20% திடீரென உயர்த்தப்பட்டுள்ளது வெளியூர் பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தனியார் பேருந்து சங்கத்தில் பெட்ரோல் உயர்வு,சுங்க கட்டணம்  மற்றும் உதிர்பாகங்கள் விலை உயர்வின் காரணமாக இந்த கட்டண உயர்வு என்று கூறுகிறார்கள், அவர்கள் தரப்பு சொல்வது சரிதான் ஆனால் தொடர்ந்து பல வருடங்களாகவே தொடர் விடுமுறையில் கட்டணம் உயர்த்துவது ஏன் என்ற கேள்விக்கு பதில் என்ன?

You'r reading பண்டிகை நேரம்: மக்களின் கொண்டாட்டமும் தனியார் பேருந்தின் கொள்ளையும்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை