சிலைக்கடத்தல் வழக்கு குறித்து 50 வழக்குகளின் எப்.ஐ.ஆர்ஐ காவல்துறையினர் தரவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஐஜி பொன்.மாணிக்கவேல் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுதியது.
சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து தாக்கப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் போது காவல்துறையினர் மீது இந்த குற்றசாட்டு கூறப்பட்டுள்ளது. இதையடுத்து 50 முதல் தகவல் அறிக்கைகளையும் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நவம்பர் 15ம் தேதி ஒத்திவைத்தனர்.
இதற்கு இடையில் சிலைக்கடத்தல் வழக்கில் ரன்வீர் ஷா, கிரன் ராவ் ஆகியோர் முன் ஜாமின் மனு விசார்ணை நடைபெறும்போது இருவரது பாஸ்பேர்ட்களும் நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டனர்