போக்குவரத்து தொழிலாளர்களுடன் முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: கமல்ஹாசன் ட்வீட்

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை மனதில் கொண்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நடிகர் கமல் ஹாசன் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ட்விட்டர் மூலம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து திமுக உள்ளிட்ட 13 தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று இரவு முதல் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தமிழகம் முழுவமு ஒரு சில பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. பெரும்பாலான பேருந்துகள் இயக்காததால் பொது மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

பேருந்து ஸ்டிரைக் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு தயவாய் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பொங்களுக்கு அதுவே அரசு தரும் விலைமதிப்பில்லா பரிசாகும்.
இவ்வாறு கமல் கூறியுள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!