ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும், படிப்போ அல்லது வேலையோ நாம் தான் முதலில் இருக்க வேண்டும் என்று நினைப்போம், அதற்கு எந்த மாய மந்திரமும் இல்லை பின்வரும் வழிகளை பின்பற்றினால் போதும்.
- முதலில் நேரம் நேரத்தை உருப்படியாக செலவிட தெரிந்து கொள்ளுங்கள் அதுதான் வெற்றிக்கான முதல் படி.
- தேல்வியை கண்டு பயாப்படாமல், கீழே விழுவது வேகமாக எழுவதற்காக என்பதை புரிந்துகொள்ளுங்கள், நீங்களாகவே எழுந்து வரவேண்டும் உங்கள் தன்னம்பிக்கை தவிர வேறு எந்த கையையும் ஏதிர்பார்க்கதிங்க.
- பிடித்த விசயங்கள் மட்டும் தான் செய்வேன் என்று பிடிவாதமாக இருக்காதிற்கள், நீங்கள் செய்யும் பணிகளை பிடித்ததாக மாற்றிக் கொள்ளுங்கள்.
- எதற்கும் பயப்படாமல், தேங்கி இருக்கும் குளம் போல் இல்லாமால் ஆறுகள் போல புதிய முயற்சி நோக்கி செல்லுங்கள்.
- நமது எண்ணங்கள் தான் நம்மை உருவாக்கும் அதற்காக எப்பொழுதும் நல்லதே நினையுங்கள்,எல்லாம் நன்மைக்கே என்று எப்பொழுதும் பாசிடிவ்வாக இருங்கள்
- எதிர்மறையான எண்ணங்களை உங்கள் அகராதியிலிருந்து துடைத்து எறியுங்கள்.
- வாய்ப்புகளை எந்த நிமிடத்தில் வேண்டுமானலும் வரும் அதனை நன்றாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும், உங்களுக்கா வாய்ப்புகளை நீங்களே உருவாக்குங்கள்
- நான் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு இறை நம்பிக்கையோடு உழைக்க கற்றுக்கொள்ளுங்கள்.
- நாளை என்று எதையும் தள்ளிப்போடாதீர்கள் .
- எந்த ஒரு முடிவும் துணிச்சலாக எடுங்கள்
- வெற்றி பெற உழைப்புதான் முதல் சாவி அதனால் தினமும் உங்களுக்கான உழைக்கும் நேரத்தை எதற்காகவும் மாற்றிக்கொள்ளாதீர்கள்(படிப்பவர்களுக்கு படிப்புதான் உழைப்பு)
- உயர்ந்த இடம் உடனடியாக கிடைத்து விடாது, ஒவ்வொரு படியாக, மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறுங்கள்.
- உங்கள் மீது தவறு இருந்தால் யார் சொன்னாலும் திருத்திக்கொள்ளுங்கள், அதே நேரம் தவறு உங்கள் மீது இல்லை என்றால் யார் எதிர்தாலும் செய்து முடியுங்கள்.
- இறுதியாக வாழ்க்கையில் பணத்தால் மட்டும் சந்தோஷம் வருவது இல்லை, உங்கள் உடன் இருப்பவர்களையும் நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள்.