கடந்த 2016, இதே நாளான நவம்பர் 8ம் தேதி இரவு மக்கள் முன்னிலையில் பேசிய பிரதமர் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். இதையடுத்து, புதிய ரூ.500, ரூ. 2000 நோட்டுக்களை மத்திய அரசு வெளியிட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மூடிய சிறு தொழிற்சாலைகளை கணக்கெடுத்தாலே போதும் இது யாருக்கான வெற்றி என்பது. இரண்டு ஆண்டு நிறைவடைந்ததை யடுத்து, இது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இதனால் நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு என்ன? என்பதை விளக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி இன்று தேசியளவில் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.
இதனிடையே, இந்த விவகாரம் தொடர்பாக தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு,
"பிரதமர் மோடி, அமித்ஷா தொண்டர் படையுடன் மேள தள முழங்க ஆட்டம் பாட்டத்துடன் பணமதிப்பிழப்பு தினத்தை கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்த்திருந்தேன் ஆனால் இங்கு அதற்கு மாறாக அமைதியல்லவா நிலவுகிறது.
இது ஒன்றே போதும். தாங்கள் தேசத்தை சூறையாடி அப்பாவிகளின் வாழ்க்கையை சிதைத்துவிட்டோம் என்பது பாஜகவுக்கே தெரிந்திருக்கிறது.
இன்று தான் பிரதமர் தன் கோபத்தை மக்கள் மீது செலுத்தினார். இந்த நாள் இந்திய வரலாற்றின் கறுப்பு தினம்.
பிரதமரைத் தவிர பிரபல பொருளாதார நிபுணர்கள் பலரும் இதில் ஒத்துப் போகிறார்கள். ஒரு பேரிடரே நிகழ்ந்த பின்னும்கூட பிரதமர் அதை ஏற்க மறுத்துக் கொண்டிருக்கிறார்"
இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்.