மண்மூடி மறைக்கப்பட்ட ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள்

Gold Ornaments discovered in the enclosed Adichanallur

by Vijayarevathy N, Nov 8, 2018, 19:25 PM IST

இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டத்திற்கு அருகில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூரில் நடைப்பெற்ற அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட பண்டைய அணிகலன்கள் பல கிடைத்துள்ளன. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்கள் பயன்படுத்திய பொருட்கள் இவை.

இன்று அவ்வூர் மண்களும், கற்குவியல்களும், பாறைகளும் நிறைந்து மேடாகக் காட்சி தருகிறது. ஆதித்தநல்லூர் இப்போது ஆதிச்சநல்லூர் என்று அழைக்கப்படுகிறது.

உலோக கால நாகரிக மக்களே ஆதித்தநல்லூர் பகுதியில் வாழ்ந்துள்ளனர். இரும்பு உலோகம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது தங்கம். எனவே, மிகத்தொன்மையான காலக்கட்டத்தை சேர்ந்த ஆதிமனிதர்கள் இங்கு வாழ்ந்தனர் என்பதை அறியலாம்.

ஆதிச்சநல்லூர் தாமிரபரணிக் கரையில் அமைந்துள்ளது. இங்கு கிடைத்துள்ள இரும்புக் கலப்பைகள், கலப்பையின் முனைகள், மண்வெட்டிகள் போன்றவை உழவுத்தொழிலில் ஈடுபட்ட மக்கள் பயன்படுத்தியவை. தானியங்களின் சிதைவுகளும் கிடைத்துள்ளன.

பெரிய பெரிய தாழிகள் கிடைத்துள்ளன. இவற்றுள் முழு மனிதனின் எலும்புக்கூடுகள், எலும்புகளின் சிதறல்கள், மண்டை ஓடுகள் காணப்படுகின்றன. மண்டை ஓடுகள் அடிபட்டு சிதைக்கப்பட்டு காணப்படுகின்றன. மிகப்பெரும் போர் ஒன்று நடைப்பெற்று இறந்தவர்களின்  உடல்களைத் தாழிக்குள் வைத்து அடக்கம் செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

தாழிகளை 6 அடி முதல் 10 அடிவரை ஆழமான குழிகளில் புதைத்துவிட்டு கற்பலகைகளைக் கொண்டு மூடியுள்ளனர். கருப்பு நிறப் பானைகளும், சிவப்பு நிறப்பானைகளும், கருப்பும், சிவப்பும் கலந்த நிறத்தில் புனையப்பட்ட பானைகளும் கிடைத்துள்ளன.

சேவல் கொடிப் போன்ற அமைப்புகள் கிடைத்துள்ளன. ஒருவேளை முருக வழிபாடு இங்கு இருந்திருக்கலாம். 1902 – 1903 ம் ஆண்டுகளில் அரசு தொல்லியல் துறை அகழாய்வுகளை மேற்கொண்டது. இங்கு கிடைத்துள்ள தாழிகள் சிந்து வெளியிலும், கொற்கையிலும் கிடைத்த தாழிகளை விடப் பெரியவை. தாழிகள் கால்கள் உடையவை.

ஆதிச்சநல்லூரில் நடைப்பெற்ற அகழாய்வில் தங்கத்தால் செய்யப்பட்ட பண்டைய அணிகலன்கள் பல கிடைத்துள்ளன. நெற்றிச்சுட்டிகள், நெற்றிப்பட்டங்கள், தங்கச்சரம், தங்கத்துகள்கள் பல கிடைத்துள்ளன. 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட மக்கள் பயன்படுத்திய பொருட்கள் இவை. இன்று அவ்வூர் மண்களும், கற்குவியல்களும், பாறைகளும் நிறைந்து மேடாகக் காட்சி தருகிறது.

சிந்துவெளி மற்றும் தமிழகத்து ஊர்களில் கிடைத்த பானை ஓடுகளில் குறியீடுகளும், எழுத்துகளும் உள்ளன. ஆதிச்சநல்லூரில் பானை ஓடுகளில் எழுத்துக்கள் இல்லை என்பதால் எழுத்து வரி வடிவம் தோன்றியிருந்த மிகப்பழங்காலத்தைச் சேர்ந்தவை இவை என்று அறியலாம்.

கற்காலத்தில் பொற்காலம் கண்டது ஆதிமனிதனின் ஆதிச்சநல்லூர். பாண்டிய நாட்டில் பிரளயம் வருகிறது என்று மீன் ஒன்று பாண்டிய மன்னனுக்கு அறிவுறுத்தியதாம். மன்னனும் பாதுக்காப்பான கப்பல் செய்து அதில்ஏறிக்கொள்ள அந்த மீன் கப்பலை பொருணை ஆற்றின் வழியாகக் கொற்கையிலிருந்து ஆதிச்சநல்லூருக்கு இழுத்து சென்று மேட்டுப்பகுதியில் மன்னனைக் காப்பாற்றியது என்பார்கள்.

இப்பேற்பட்ட ஆதிச்சநல்லூரின் பெருமைகளை மண்மூடி விடாமல் காப்பாற்றுவோமாக.

You'r reading மண்மூடி மறைக்கப்பட்ட ஆதிச்சநல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க ஆபரணங்கள் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை