திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீப திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.
நினைத்தாலே முக்தி தருபவர் திரு அண்ணாமலையார். அவ்வண்ணாமலையார் வீற்றிருக்கும் இடமே திருவண்ணாமலை. சிவ பெருமான் இங்கு மலையாக காட்சியளிக்கின்றார். மாத மாதம் ஒவ்வொரு பவுர்ணமி தினத்தன்று லட்சகணக்கான பக்தர்கள் வலம் வந்து, கொடிய நோய்களை தீர்த்தும், அருணாசலேஸ்வர் அருளைப் பெற்றும் செல்கின்றனர்.
இம்மலைக்கென பல கதைகள் கூறப்பட்டு வருகின்றன. அதில் ஒன்று ஈசனின் அடிமுடி காணமுடியாத இடம் இத்திருவண்ணாமலை என்று கூறப்படுகிறது. மேலும் அருணகிரி நாதருக்கு முருகப்பெருமான் காட்சி தந்த ஸ்தலமும் திருவண்ணாமலையே.
கிரிவலம் செல்கையில் பெரும்பாலான நோய்கள் தீர்க்கப்படுகிறது. இம்மலையில் எண்ணற்ற மூலிகைகள் காணப்படுகிறது. இவை காற்றுடன் கலந்து, கிரிவலம் செல்பவர்கள் அக்காற்றினை உள்ளிழுக்கும் போது பல கொடிய நோய்கள் தீர்க்கப்படுகிறது.
மேலும் மிகவும் பிரசித்திப் பெற்ற கார்த்திகை தீப திருவிழா வெகு விமர்சியாக 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் நவம்பர் 14-ந் தேதி இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 23 ந் தேதி மகா தீபம் ஏற்றப்பட்டு கொண்டாடப்படுகிறது.
மகா தீபத்தன்று விடியற்காலையில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு மலையின் உச்சியில் கார்த்திகை தீபமும் ஏற்றப்படுகிறது. சரி பத்து நாட்கள் எவ்வாறு கொண்டாடடுகின்றனர் என பார்ப்போம்.
முதல் நாள் (14.11.2018)
இன்று விடியற்காலை 5.00 மணிக்கு மேல் 6.15 மணிக்குள் துலாம் லக்கனத்தில் கொடியேற்றம் நடைப்பெற்றது மேலும் பஞ் மூர்த்திகள் வெள்ளி விமானத்தில் வருகை.
இரவு பஞ்ச மூர்த்திகள், வெள்ளி அதிகார நந்தி மற்றும் ஹம்ச வாகனம் வருகை.
இரண்டாம் நாள் (15.11.2018)
காலை விநாயகர், சந்திர சேகரர் தங்க சூரிய பிரபை வாகனத்தில் வருகை.
இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி இந்திர வாகனத்தில் வருகை.
மூன்றாம் நாள் (16.11.2018)
காலை விநாயகர், சந்திர சேகரர் பூத வாகனத்தில் வருகை.
இரவு பஞ்ச மூர்த்திகள் சிம்ம வாகனம் மற்றும் வெள்ளி அன்ன வாகனத்தில் வருகை.
நான்காம் நாள் (17.11.2018)
காலை விநாயகர், சந்திர சேகரர் நாக வாகனத்தில் வருகை.
இரவு பஞ்ச மூர்த்திகள், வெள்ளி காமதேனு மற்றும் கற்பக விருட்ச வாகனத்தில் வருகை.
ஐந்தாம் நாள் (18.11.2018)
காலை விநாயகர், சந்திர சேகரர் கண்ணாடி ரிஷப வாகனத்தில் வருகை.
இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி பெரிய வாகனத்தில் வருகை.
ஆறாம் நாள் (19.11.2018)
காலை விநாயகர், சந்திர சேகரர் வெள்ளி யானை வாகனத்தில் வருகை மற்றும் 63 நாயன்மார்கள் வீதி உலா.
ஏழாம் நாள் (20.11.2018)
காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் விருச்சிக லக்கனத்தில் அருள் மிகு விநாயகர் தேரோட்டம். பஞ்சமூர்த்திகள் மற்றும் மகாரதம் புறப்பாடு.
எட்டாம் நாள் (21.11.2018)
காலை விநாயகர், சந்திர சேகரர் குதிரை வாகனம்.
மாலை 4.00 மணிக்கு பிச்சாண்டவர் உற்சவம்.
இரவு பஞ்சமூர்த்திகள் குதிரை வாகனம்.
ஒன்பதாம் நாள் (22.11.2018)
காலை விநாயகர், சந்திர சேகரர் புருஷா முனி வாகனத்தில் வருகை.
இரவு பஞ்சமூர்த்திகள் கைலாச வாகனம் மற்றும் காமதேனு வாகனத்தில் புறப்பாடு
மகா தீபம் - பத்தாவது நாள் (23.11.2018)
அதிகாலை 4.00 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்படுகிறது.
மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டு பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் வருகை.
இவ்வாறு பத்து நாட்களும் மிக விமர்சியாக நடக்கும் தீபத் திருவிழாவில் கலந்து கொண்டு அருள் மிகு அண்ணாமலையாரின் அருளை பெற்றிடுங்கள்.