இந்தியன் 2 படத்தில் இணைந்த சிம்பு!

Simbu joins Kamal in Indian2

by Mari S, Nov 14, 2018, 12:10 PM IST

மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படத்தை தொடர்ந்து ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

ஷங்கரின் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தில் கமலை துரத்தி கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக சிம்பு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கதாபாத்திரத்திற்கு முதலில் அஜய் தேவ்கனை ஷங்கர் அணுகியிருந்தார். கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் ஒதுங்கிக் கொண்டார். பின்னர், 2.0 வில்லன் அக்‌ஷய் குமாரிடம் கதையை ஷங்கர் கூறியிருக்கிறார்.

இன்னொரு படத்திலும் வில்லன் வேடமா என அவரும் மறுத்து இருக்கிறார். இந்நிலையில், இறுதியாக சிம்புவை அந்த கதாபாத்திரத்திற்கு ஓகே சொல்ல வைத்துள்ளார் ஷங்கர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்த தகவலை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

You'r reading இந்தியன் 2 படத்தில் இணைந்த சிம்பு! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை