ரஜினியின் பேட்ட பொங்கல் நாளில் ரிலீஸ்

Rajinikanths petta to relase on Pongal

by Mathivanan, Nov 14, 2018, 12:42 PM IST

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படம் பொங்கல் நாளில் வெளியிடப்படும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரஜினிகாந்தின் 165-வது திரைப்படம் பேட்ட. இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் விஜய் சேதுபதி, சிம்ரன், நவாசுதீன் சித்திக், திரிஷா, சசிகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார். பேட்ட திரைப்படம் பொங்கல் பண்டிகையின் போது வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
மேலும் ரஜினியுடன் சிம்ரன் இருப்பது போன்ற 3-வது போஸ்டரையும் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

பொங்கலுக்கு அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

You'r reading ரஜினியின் பேட்ட பொங்கல் நாளில் ரிலீஸ் Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை