மூக்கில் இருந்த ட்யூப்பை கழற்றி எறிந்ததால் மரணத்தை தழுவிய காடுவெட்டி குரு.. பகீர் தகவல்

வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவின் மகன் கனல் அரசன் எழுப்பும் கேள்விகள், பா.ம.க முகாமுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளன. இதுதொடர்பாக, சமூக ஊடகங்களில் தீவிர விவாதமும் நடந்து வருகிறது. 'தன் மூக்கில் இருந்த ட்யூப்புகளை அகற்றியெறிந்து மரணத்தைத் தழுவினார் குரு' என்ற தகவலும் வெளியாகி அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

நுரையீரல் பிரச்னை தொடர்பாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குரு, கடந்த மே மாதம் மரணம் அடைந்தார். அவரது மரணம் வடமாவட்டங்களில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கடந்த சில நாள்களாக காடுவெட்டி குருவின் மகன் கனல், தனது தாயை பூந்தமல்லியில் உள்ள உறவினர் வீட்டில் மறைத்து வைத்திருக்கிறார்கள் என வீடியோ ஒன்றில் தோன்றி பேசினார். 'குருவின் சொத்துக்களைக் கைப்பற்றத்தான் இப்படி செய்கிறார்கள்' என்ற தகவலும் பரவியது.

இதையடுத்து, சமூக வலைத்தளத்தில் விரிவாகப் பதிவிட்டிருக்கிறார் குருவின் ஆதரவாளர் ஒருவர். அவர் கூறியிருப்பதாவது:

மாவீரன் குருவுடன் 25 ஆண்டுகாலம் எல்லா கஷ்ட,நஷ்டங்களிலும் பயணித்தவன் என்கின்ற முறையிலும், அப்பல்லோ மருத்துவமனையில் குரு அவர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 45 நாட்கள் ஊன் உறக்கமின்றி உடனிருந்தவன் என்ற முறையிலும் அவரது குடும்பத்தார் தொடர்ந்து அவரது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் படி செயல்படுவது மன வேதனை அளிக்கிறது.

மிகுந்த மனவேதனையுடன் இப்பதிவை எழுதுகிறேன். மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் அண்ணன் மாவீரன் அவர்கள் உயிருடன் இருந்தபோது ஒரு சிலர் சந்தேகம் எழுப்பிய சமயத்தில், “மரணம் என்ற ஒன்று தான் என்னை அய்யாவிடம் இருந்து பிரிக்குமே தவிர வேறு யாராலும் பிரிக்க முடியாது“ என்று கூறினார்.

மரணப்படுக்கையில் இருந்த போதும் தன் மகன் கனலிடத்திலும் மருத்துவமனையில் யாரையும் அனுகவிடாமல் பார்த்துக் கொண்டிருந்த தன் தங்கையிடத்திலும் “அய்யா சொல்படி – கேட்டு நடந்துகொள்ளுங்கள் “ என்று கூறிவிட்டுத்தான் இறந்தார்.

இந்நிலையில் குருவின் தங்கை கணவர் பழஞ்சநல்லூர் அன்பழகன் அவரது மகன் மனோஜ் ஆகிய இருவரும் “மாவீரன் குரு வன்னியர் அறக்கட்டளை மற்றும் நலச்சங்கம்” என்று ஒன்றை புதிதாக ஆரம்பித்து பதிவு செய்து காடுவெட்டியில் பெயர்ப் பலகை வைத்து நிதி வசூல் செய்து வருவது தெரிந்த பின் அவ்வூர் பெரியவர்கள் அதைத் தடுத்துவிட்டனர்.

அண்ணன் அவர்கள் உயிருடன் இருந்த போது தன் மகளையும், மகனையும் அவர்களிடம் தங்க வைத்துப் படிக்க வைத்ததால் அதற்கான பணத்தை கணக்கில்லாமல் கொடுத்து வந்துள்ளார். அந்த ருசி அறிந்தவர்கள் பணம் இல்லை என்பதால் தவறான வழியில் பணம் திரட்ட ஆரம்பித்துள்ளனர்.

இதுபோதாதென்று வெளிநாடுகளில் உள்ள இன உணர்வாளர்களிடம் தொடர்பு கொண்டு கோடிக்கணக்கில் கடனை வைத்து விட்டு மாவீரன் இறந்துவிட்டார், குடும்பத்தைப் பார்க்காமல் கட்சிக்கு உழைத்தார் என்று சொல்லி நிதிதிரட்ட முன்வந்துள்ளனர்.

அம்மாவை அடித்து உதைத்த காடுவெட்டி குரு மகன்

இந்த நேரத்தில் கம்போடியாவில் நடைபெறவுள்ள அகில பாரதசத்திரியர் மாநாட்டில் பல லட்சம் நிதி திரட்டித் தருவதாக பல வன்னியர்கள் ஆசை காட்டியதால் தன் பிளஸ் டூ படிப்பைப் பொருட்படுத்தாமல் கம்போடியா, சிங்கப்பூர், துபாய் என்று செல்ல அன்பழகனும் மனோஜும் திட்டமிட்டு கனலின் மனதைக் கெடுத்து படிக்கவிடாமல் பாஸ்ப்போர்ட் எடுக்க வேலை செய்தனர். கனல் மைனர் என்பதால் தாயின் அனுமதியுடன் தாயைக் கார்டியனாக்கிதான் பாஸ்போர்ட் எடுக்க முடியும்.

அதனால் கனலின் தாயார் கால் எலும்பு முறிந்து சிகிச்சை பெற்று நடக்கமுடியாமல் உள்ள நிலையில் கையெழுத்து வாங்கக் கனலும், மனோஜும், அன்பழகனும் சென்னையில் தன் உறவினர் வீட்டில் தங்கியிருந்த அண்ணி லதா குருநாதனிடம் சென்று கையெழுத்து கேட்டுள்ளனர். அப்போது அவர், படிக்கின்ற வேலையில் இப்பொழுது வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? அப்பா, உன்னை பெரிய டாக்டராக்க ஆசைப்பட்டார். ஆனால் நீ கேட்பார் பேச்சைக் கேட்கிறாய். முதலில் பிளஸ் டூவில் நல்லமார்க் எடுத்து பாஸ் செய்துவிட்டு பின்னர் எங்கு வேண்டுமானாலும் போகலாம்' என்று கூறியுள்ளார்.

அதற்கு கனல் தன் அம்மாவை வாய்க்கு வந்த படியெல்லாம் திட்டி, கழுத்தில் கைவைத்து கொன்று விடுவேன் என்று கூறியுள்ளார். பின்னர் அங்கே விஷயம் தெரிந்து சென்னை மாவட்ட மூத்த நிர்வாகிகள் சென்றதும், அம்மாவைப் பார்க்க வந்ததாகவும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஆனால், பின்னர் உள்ளே சென்ற கனல் தன் தாயைக் காலால் எட்டி உதைத்து கீழே தள்ளிவிட்டு துன்புறுத்தியுள்ளார். இதனைப் பார்த்த கட்சி இளைஞர் ஒருவர் மனம் பதறி வெளியில் வந்து கட்சி நிர்வாகியிடம் கூறியுள்ளார்.

கனல், தற்பொழுது அன்பழகன் கட்டுப்பாட்டில் மனம் மாறி அப்பா வளர்த்த சங்கத்திற்கு எதிராக செயல்படுகிறார். இந்த அன்பழகனின் சொந்த ஊர் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள பழஞ்சநல்லூர் கிராமம். இந்த அன்பழகனை அண்ணன் குரு உயிரோட இருந்தபோது அவரது நடவடிக்கைகளாலும்,செயல்பாட்டாலும் ஒதுக்கி வைத்திருந்தார்.

ஆனால் இந்த அன்பழகன் குரு உடல் நிலை சரியில்லாமல் மூக்கில் ட்யூப் வைத்துக்கொண்டு சென்னை வீட்டில் இருந்தபோது தொடர்ந்து அவருக்கு கோபம் வரும்படி நடந்து வந்துள்ளார். இப்படியே தொடர ஒரு நாள் வாக்குவாதம் முற்றிவிட குரு, தன் மூக்கில் இருந்த ட்யூப்களை இழுத்துப் போட்டு விட்டு கோபத்துடன் எழுந்துள்ளார். அதனால் தான் சரியாகி வந்த அவரது நுரையீரல் செயல் இழந்து மரணப் படுக்கைக்கு அழைத்துச் சென்றது' எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பு: இந்த விவகாரம் தொடர்பாக மாறுபட்ட சில கருத்துகளும் கூறப்படுகின்றன. அவற்றை எவரேனும் நமக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தால் அதையும் நாம் வெளியிட தயாராக இருக்கிறோம் (ஆசிரியர்)

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!